எடையை குறைக்க தினசரி இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்க! காய்கறிகளில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன அதனால் கார்போஹைட்ரேட்ஸ் கொண்ட உணவுகளை தவிர்த்து, காய்கறிகளை சேர்க்கவும் உடற்பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம் நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா என எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிக்கலாம் எவ்வளவு சாப்பிடுகிறோம், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதை கணக்கில் கொள்ளவும் அப்போதுதான் அதை குறைக்கலாமா? அதிகரிக்கலாமா? என்ற முடிவுக்கு வர முடியும் உங்கள் டயட்டில் தேவையான புரதம் கொண்ட உணவுகளை சேர்க்க வேண்டும் முட்டை, பால் பொருட்கள், பருப்பு வகைகள், நட்ஸ்களில் புரதம் நிறைந்துள்ளது