முடி வளர்ச்சிக்கு வெந்தயம் பயன்படுத்தும் எளிய வழிகள்

தேவையான அளவு வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து பேஸ்ட்டாக அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம்

ஊற வைத்த தண்ணீரை ஷாம்புடன் சேர்த்து தலையை அலச பயன்படுத்தலாம்

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை போட்டு சூடுபடுத்தி ஆறவைத்து தலைக்கு மசாஜ் செய்யலாம்

வெந்தய பொடியை ஷாம்பு அல்லது கண்டிஷனரில் சேர்த்து பயன்படுத்தலாம்

வெந்தய பொடியை தயிருடன் சேர்த்து தலைக்கு தடவலாம்

வெந்தயத்தை கொதிக்க வைத்து தண்ணீரை தினமும் தலையில் தேய்த்து குளிக்கலாம்

வெந்தய பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தலையில் தடவலாம்

வெந்தய பொடியை மருதாணி சேர்த்து தலையில் தடவலாம்

ஷாம்பு பாட்டிலில் வெந்தய விதையை சேர்த்து ஊற வைத்து பயன்படுத்தலாம்

எலுமிச்சை சாறுடன் வெந்தய பொடியை சேர்த்து தலையில் தடவலாம்