உங்க சருமம் ஜொலிக்கணுமா ? அப்ப இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்

Published by: விஜய் ராஜேந்திரன்

இனிப்பு உருளைக்கிழங்கு

இதில் இருக்கும் வைட்டமின் ஏ சருமத்திற்கு ஈரப்பதனை அளிக்கிறது. இதில் வைட்டமின் சியும் உள்ளது இதனால் சருமம் விரிசல் ஆவதை தவிர்த்து பாதுகாக்கிறது

நட்ஸ்

பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி, ஹேசல்நட்ஸ் விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், பைன் நட்ஸ், மக்காடமியா போன்றவை சரும நலனை அளிக்கின்றது

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்துக்கள் காணப்படுகின்றது. அது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவும்.

தேங்காய்

தேங்காயில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இதன் காரணமாக முகத்தில் முகப்பரு வராமல் தடுக்க உதவும்

தயிர்

தயிரில் புரோபயாடிக் நிறைந்து காணப்படுகின்றது. ஈரப்பதத்தை தக்கவைத்து சருமத்தின் வறட்சியை வரவிடாமல் தடுக்கும்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் சருமத்திற்கு ஊட்டச்சத்தை வழங்க கூடிய வைட்டமின்கள் ஏ ,சி, ஈ, ஆகியன அடங்கியுள்ளன.

கேரட்

கேரட்டில் நிறைந்துள்ள கரோட்டினாய்டு காரணமாக தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நமது சருமம் முன்னதாகவே முதிர்ச்சி அடைவதை எதிர்க்கிறது மற்றும் கொலாஜன் உற்ப்பத்தியை தூண்ட உதவும்

தக்காளி

தக்காளியில் லைகோபீன் உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது