பாரம்பரிய பத்திய உணவு பட்டியலில் குழியடிச்சான் அரிசி முக்கிய பங்கு வகுக்கிறது குழிநீரில் கொண்டு வளர்ந்து நெற்கதிர்கள் வெடிப்பதால் குழியடிச்சான் என அழைக்கப்படுகிறது வறட்சி காலத்திலும் குழியடிச்சான் நெல் வளரும் இதை குழியடிச்சான் அல்லது குழி வெடிச்சான் என்று சொல்லலாம் இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் இதில் இருக்கும் நார்சத்து, மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம் இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் உறுதிப்படுத்த உதவலாம் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இது ஏற்றது இதில் கஞ்சி, களி, புட்டு செய்து சாப்பிடலாம்