10 நொடிகளில் தூக்கத்தை தூண்டும் மில்ட்ரி டெக்னிக்!



பல்வேறு காரணங்களால் நமது தூக்கம் தடைபடுகின்றது



தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் நமது உடல் நலனை பாதிக்கின்றன. அதேபோல, மனநலனும் பாதிப்படையும்



ராணுவ தூக்கம் என்ற முறையை கையாண்டால் 10 நொடிகளில் தூங்கி விடலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்



முதலில் நமது முக தசைகளை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்



தோள்களை தொங்கவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும்



உங்கள் மார்பு மற்றும் கைகள் ஆகியவை ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்



கால்கள் மற்றும் தொடை ஆகியவற்றையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்



அடுத்த 10 நொடிகளுக்கு அனைத்து சிந்தனைகளையும் விலக்கி, உங்கள் மனம் அமைதி பெறும்



இதில் பலன் கிடைக்கவில்லை என்றால் மீண்டும், மீண்டும் இதே உத்தியை செய்யலாம்