பல பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை என்றால் அது முகப்பருதான்



என்னதான் நம் முகம் கலராகவும் பொலிவாகவும் இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது



பசு நெய்யை சாப்பிட்டு வந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தாலும் சருமத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கலாம்



பசு நெய், ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது



பசு நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது



நெய்யில் நிறைந்துள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் அழகை மேம்படுத்தலாம்



பசு நெய்யில் வைட்டமின்கள் A, D, E மற்றும் K போன்றவை மட்டுமல்லாமல் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் நிறைந்துள்ளது



இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரித்து, முகப்பருவை போக்கலாம்



மேக்கப் மற்றும் தூசு போன்றவற்றை அகற்றுவதற்கு, பசு நெய்யை நேச்சுரல் கிளன்சராக பயன்படுத்துகின்றனர்



முகப்பருக்களை ஏற்படுத்தக்கூடிய அடைப்பட்ட துளைகளை நாம் தவிர்க்கலாம்