கொரியாவின் பெண்கள், சருமப் பொலிவை அதிகரிக்கவும், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அரிசி கழுவும் நீரை பயன்படுத்துகின்றனர்



அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன்படுத்தலாம்



அரிசியை கைகளால் நன்றாக அழுத்தி கழுவ வேண்டும்



கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் சேர்ந்து கூடுதல் பலன்களைக் கொடுக்கும்



இந்த நீரை தலையில் ஸ்ப்ரே செய்து, சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்



இதனால் முடி உதிர்வு குறையலாம். முடி வளர்ச்சி தூண்டப்படலாம்



பொடுகு பிரச்சினை உள்ளவர் அரிசி நீரை பயன்படுத்த வேண்டாம்



அதுபோல, குளிக்கும் முன்னர் முகத்தில் இந்த நீரை தடவி மசாஜ் செய்யலாம்



அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும்போது, செல்கள் புத்துணர்ச்சி பெறலாம்



தேவையான அளவு பயன்படுத்திய பின்னர், மீதமுள்ள அரிசி நீரை காற்று புகாத பாட்டிலில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம்