க்ளன்சர், டோனர், மாய்ச்சரைஸராக ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்தலாம்? பார்க்கலாம்.



ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து வைத்து, அந்த தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று கைப்பிடி அளவுக்கு பன்னீர் ரோஜா இதழ்களைப் போட்டு, அதை மூடி வைத்துவிட வேண்டும்.



சிறிது நேரம் கழித்து, அதை வடிக்கட்டினால், ரோஸ் வாட்டர் வீட்டிலேயே தயார்.



இது ஒரு சிறந்த கிளன்சர்.



ரோஸ் வாட்டரை ஸ்பிரே பாட்டிலில் வைத்தும் பயன்படுத்தலாம்.



ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் அடிக்கடி ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.



சருமம் புத்துணர்ச்சியாக உணர ரோஸ் வாட்டர் சிறந்தது.



சரும பொலிவிற்கு இது பெரிதும் உதவுகிறது,



நீங்கள் இயற்கையாக பயன்படுத்தும் பேஸ் பேக்குகளில் ரோஸ் வாட்டரை சேர்க்கலாம்.



சரும பராமரிப்பில் ரோஸ் வாட்டர் ஒரு முக்கியமான பொருள்,