வீட்டில் சுற்றித்திரியும் எறும்புகளை விரட்டி அடிக்க சூப்பர் டிப்ஸ்..!



முக்கியமான சமையலறை பிரச்சினைகளில் ஒன்று எறும்பு மொய்ப்பது



அதுவும் மழைக்காலம் வந்துவிட்டால் போதும் அனைத்து இடங்களில் எறும்பு சாரை சாரையாக படையெடுக்க தொடங்கிவிடும்



குழந்தைகள் வீட்டில் இருந்தால் எறும்பு மருந்துகள் போட முடியாது



வீட்டில் மொய்க்கும் எறும்புகளை இயற்கையாக உடனே விரட்டி அடிக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்



உங்கள் வீட்டில் எறும்பு மொய்க்கும் இடத்தில் பேக்கிங் சோடாவை போடலாம். அந்த வாசனைக்கு எறும்புகள் வராது



மிளகுத் தூளை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்



பட்டைத்தூளை தண்ணீரில் கலந்து கதவுகள் மற்றும் ஜன்னலில் தெளிக்கலாம்



எலுமிச்சை சாறை தெளிப்பதாலும் எறும்புகள் அண்டாது



உணவு பொருட்களை பதப்படுத்த உபயோக்கிக்கப்படும் வினீகரை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்