தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது தொடர் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து ரசிகர்களுக்கு சிறப்பான திரை விருந்தை கொடுத்து வந்தார் இவர் நடிப்பில் வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது தற்போது குக்கூ புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரபலமான மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான WWE-யின் விளம்பரத்தில் நடித்துள்ளார் WWE நிகழ்ச்சி தற்போது சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகி வருகிறது அந்த நிகழ்ச்சியின் அசத்தலான விளம்பர படத்தில் நடிகர் கார்த்தி WWE சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார் இது வாரந்தோறும் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது அதன் மறுஒளிபரப்பு நிகழ்ச்சி மாலை 8 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது எனும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது கார்த்தி நடித்துள்ள இந்த WWE விளம்பரம் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது