விஜய் - லோக்கி கூட்டணியில் உருவாகும் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இந்த படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் பாலிவுட் இயக்குநரான கரண் ஜோகர், ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஹானி படத்தை இயக்கி வருகிறார் இதன் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இதற்கிடையில் கரண், லியோ செட்டிற்கு சென்றுள்ளார் த்ரிஷா மற்றும் படக்குழுவினருடன் கரண் ஜோகர் இந்த புகைப்படத்தை கோலிவுட், பாலிவுட் சினிமா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் இதன் பின், ரசிகர்கள் வெவ்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர் லியோவின் ஹிந்தி விநியோக உரிமையை தர்மா ப்ரொடக்ஷன்ஸ் பெறும் என்றும் கூறப்படுகிறது இதனால் பல ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்