நெயில் பாலிஷிலுள்ள ரசாயனம் ஹார்மோன் அமைப்புகளில் தொந்தரவுகளை ஏற்படுத்தலாம் இதிலுள்ள ரசாயனங்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் நெயில் பாலிஷ் பயன்படுத்திய 10 மணி நேரத்திற்குப் பிறகு, அதன் விளைவு அதிகரிக்குமாம் நெயில் பாலிஷில் டோலுயீன் ரசாயனம் உள்ளது இது அதிக அளவில் உடலில் சென்றால், அது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சேதப்படுத்தலாம் இதிலுள்ள இரசாயனங்கள் உடலில் நுழைந்ததும் மனித அமைப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம் நெயில் பாலிஷில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருள் உள்ளது இது தோலுடன் தொடர்பு கொண்டால் அரிப்பு, எரிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் நெயில் பாலிஷ் வாயிற்குள் சென்றால் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவே முடிந்த அளவு நெயில் பாலிஷ் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது