ஒரு பக்கம் அழுகிய பழங்களை உண்ணலாமா..? பழத்தில் ஒரு பகுதி அழுகி போய் விட்டாலோ, அடிப்பட்டு கெட்டு போய் விட்டாலோ அதை சிலர் சாப்பிடுவார்கள் சேதம் அடைந்த பாகத்தை வெட்டி எறிந்து விட்டு, மீதி பழத்தை உண்பதில் பிரச்சினை இல்லை என்று நினைப்பார்கள் ஓரளவு அழுகிய பழங்களை உண்பது பரவாயில்லை என்று சிலர் கூறலாம் நீங்கள் பழத்தின் மேற்புறத்தில் பூஞ்சையை வெளிப்படுத்தும் பகுதியை அகற்றி விடுகிறீர்கள் ஆனால் அது தவறு. ஏனெனில் பூஞ்சை போதுமான அளவு அடர்த்தியாக இருந்தால், அதன் வேர்கள் ஆழமாக செல்லும் இதனால் பல தீங்குகள் ஏற்படலாம் பழத்தின் தோலில் நிறமாற்றம் இருந்தால், இந்தப் பகுதியில் உள்ள தோலை உரிக்கவும் இந்த பகுதியின் அடியில் உள்ள சதை அடர் பழுப்பு நிறமாகவும், மெல்லியதாகவும் இருந்தால், அது நல்லதல்ல அதனை உடனே தூக்கி எறிந்திடுங்கள்