நவின உலகிலும் சிலர் சத்தாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் முளைகட்டிய பயறு போன்ற உணவுகளை உண்ணுகின்றனர்



சாதாரணமாக பயிறை சாப்பிடுவதை காட்டிலும் முளைகட்ட வைத்து சாப்பிடுவது சிறந்தது



இதனால் உடலுக்கு அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும்



நம் பசியை உடனே போக்கும் திறன் கொண்டது



மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளவும் உதவும்



முளைகட்டிய பயறை பலரும் பச்சையாக உட்கொள்கின்றனர்



பச்சையான முளைகட்டிய பயறுகளில் இ-கோலி, சல்மோனெல்லா போன்ற கிருமிகள் நிறைந்திருக்கும்



இதனால் உடலுக்கு சில பிரச்சினைகள் ஏற்படலாம்



அதற்கு மாற்றாக முளைகட்டிய பயறை வேகவைத்து உண்ணலாம்



வேக வைப்பதால் சிறிதளவு சத்துக்கள் குறையும் என்றாலும் மீதம் இருக்கும் சத்துகளே உடலுக்கு போதுமானது என்கின்றனர்