என்னத்தான் ஐஸ் க்ரீம் கோடை காலத்தில் அதிகமாக சாப்பிடும் பொருள் என்றாலும் குளிர் காலத்திலும் பலரும் சாப்பிடுகின்றனர் சில விழாக்கள், திருமண நிகழ்வுகள் போன்றவற்றிலும் ஐஸ் க்ரீம் நிச்சயமாக இருக்கும் இவ்வாறு குளிர்காலத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? குளிர்காலத்தில் அதிக ஐஸ் க்ரீம் சாப்பிடுவதால் ஜலதோஷம் போன்றவை உண்டாகலாம் சைனஸ் மற்றும் தொண்டையில் பிரச்சினை உள்ளவர்கள் ஐஸ் க்ரீமை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஐஸ் க்ரீம் சாப்பிடாமல் இருப்பது நல்லது சர்க்கரை நோயாளிகள் ஐஸ் க்ரீம் சாப்பிட கூடாது; அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் அதிகமாக ஐஸ் க்ரீம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கலாம் முக்கியமாக இரவில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது நல்லது இல்லை என்று அறிவுறுத்தப்படுகிறது சிலருக்கு இவ்வாறு ஐஸ் க்ரீம் சாப்பிடுவது பெரிய பிரச்னையை உண்டாக்கவில்லை என்றாலும் சிலரை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது