இளம் கிரிக்கெட் வீரர் ஆயுஷ் மாத்ரே பற்றி தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

சென்னை அணியில் பேட்டிங் பலமின்றி இருப்பதால் மும்பையைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவை சி.எஸ்.கே. அணி அவரை ட்ரையல்ஸூக்காக அழைத்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

List A கிரிக்கெட்டில் 150 + ரன்கள் எடுத்த இளம் வீரர் - 117 பந்துகளில் 181 ரன் vs நாகலாந்து அணி / வயது 17 ஆண்டுகள் 291 நாட்கள்.

ரஞ்சி கோப்பை - தொடக்க ஆட்டத்திலேயே அரைசதம் அடித்தவர் ஆயுஷ் மேத்ரா - 71 பந்துகளில் 52 ரன்கள் vs Baroda

ருத்ராஜ் கெய்க்வாட் தலமையிலான அனியில் விளையாடி சதம் அடித்தது.
Ranji Trophy - 232 பந்துகளில் 176 ரன்கள் vs மஹாராஷ்டிரா

Under19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2024/25 - அதிகபட்ச ரன்எடுத்த இரண்டாவது வீரர் - 176 (Indian U19 team)

ஆயுஷ் மேத்ரா லிஸ்ட் A கிரிக்கெட்டில் 7 விக்கெட் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடும் ( Sunrisers Hyderabad) தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவின் ( Abhishek Sharma) விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாட கூடியவர்.

ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஆயுஷ் மாத்ரேவை எந்த அணியும் வாங்கவில்லை. 'Unsold' ப்ளேயர். அவரை மாற்று வீரராகவே அவரை அணியில் சேர்க்க முடியும்.

ராஜ் கோட்டில் பயிற்சியில் இருந்தவர், சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருக்கிறார். ஆயுஷ் மாத்ரே அணியில் இடம்பெறுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.