IPL-லில் ஹார்ட்ஸ் பெறும் காவ்யா மாறன் யார்?
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகும் பெயர் - காவ்யா மாறன், இவரது புகைப்படங்களும் ட்ரெண்டாகும்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.கருணாநிதியின் கொள்ளுப் பேத்தி. முன்னாள் மத்தியமைச்சர் முரசொலி மாறனின் பேத்தி; சன் குழும கலாநிதி மாறன் - காவேரி தம்பதியரின் ஒரே மகள் - காவ்யா மாறன்.
சன்ரைசர்ஸ் போட்டிகளை காணும் கிரிக்கெட் ரசிகர்கள் காவ்யா மாறனின் ரியாக்சன், கைத்தட்டல், அவரின் முகபாவனைகள் ஆகியவற்றை மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம்.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர், ஐபிஎல் ரசிகர்களிடையே இவர் பிரபலமடைந்தார். அதோடு, இவரது க்யூட் ரியாக்சன்ஸை கொண்டாடும் ரசிகர்களும் இருக்கின்றனர்.
2018-ம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை காவ்யா மாறன் நிர்வகித்து வருகிறார். சன் குழுமத்தின் செயல் இயக்குநரும் இவரே.
சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், நியூயார்க் சென்று முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர், காவ்யா. சன் குழுமத்தின் டிவி சேனல், வானொலி ஆகியவற்றை நிர்வகித்துள்ளார்.
.
ஐ.பி.எல்.-லில் 2008 முதல் 2012 வரையிலும் ஹைதராபாத் அணி டெக்கான் க்ரோனிக்கிள்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. அதன் பிறகு, அதை ரூ.425 கோடிக்கு சன் குழுமம் வாங்கியதாக கூறப்படுகிறது.
சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரோடு, காவ்யா தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 கிரிக்கெட் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என்ற அணியின் நிர்வாகத்தையும் கவனித்து கொள்கிறார்.
சன்ரைசர்ஸ் அணியின் போட்டியைத் தாண்டி, சமூக வலைதளங்களில் சென்சேஷன், வைரலாவது காய்வா மாறனின் ரியாக்ஷன்ஸ்தான் என சிலர் தெரிவிக்கின்றனர்.