எம்.எஸ். தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!
2025-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறக்க முடியாத ஐ.பி.எல். சீசனாக இருக்கும். ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கும். சென்னை அணி மோசமான பர்ஃபாமன்ஸ் என்றாலும் தோனி ஐ.பி.எல். தொடரில் இருப்பதே மகிழ்ச்சி என்று ரசிகர்கள் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
CSK vs LSG ஆட்டநாயகன் விருதை பெற்ற மிகவும் வயதான வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். எம். எஸ். தோனி 43 வயது 280 நாள்கள்..
சென்னை அணியின் கேப்டனாக 16வது முறையாக ஆட்டநாயகன் விருதை தோனி பெற்றுள்ளார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு தில்லி அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை பெற்றார், தோனி,
ஐபிஎல் வரலாற்றில் 200 Dismissals (ஸ்டம்பிங், கேட்ச், ரன் அவுட்) எடுத்த வீரர். 115 கேட்ச், 46 ஸ்டெம்பிங்க்..
அதோடு மட்டுமல்லாமல் தோனி மைதானத்தில் இருந்தாலே போதும் என்பதை கொண்டாடும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ஒரு போட்டியில் 9-வது களம் இறங்கினார், வயதாகிவிட்டது என பேசுக்கள் எழுந்தது. ஆனால், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு போதுமானதாகிவிட்டது.
எம்.எஸ். தோனியை விட சிறந்த ஃபினிசர் இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் தெரிவித்தனர்.
சி.எஸ்.கே.வின் அடுத்த போட்டிகளில் எம்.எஸ். தோனியின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.