எம்.எஸ்.தோனி கேப்டனாக எப்படி?பிரபல கிர்க்கெட் வீரர் சொல்வதென்ன?
காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகிவிட்டார். மீதமுள்ள போட்டிகளில் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருப்பார் என்று நிர்வாகம் தெரிரிவித்துள்ளது.
2025 ஐபிஎல். தொடரில் தோனி பற்றிய பேச்சுக்கள் ஏராளம். 9-வது பேட்ஸ்மென் ஆக களமிறங்கியது, 43 வயதாகியும் விளையாடுவது உள்ளிட்டவை விமர்சனத்திற்கு உள்ளானது.
தோனி, அணியின் கேப்டனாக இருந்தால் அவர் மாறுபட்ட தோனியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சௌரவ் கங்குலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி விளையாட வேண்டும் என்றால், அவர் கண்டிப்பாக சிஎஸ்கேவின் கேப்டனாக இருக்க வேண்டும். ஏனென்றால், கேப்டனாக முற்றிலும் மாறுபட்ட விதத்தில் (பீஸ்ட் மோட்) அவர் இருப்பார். இப்போதும் எம்.எஸ்.தோனியால் சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது.
”பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் சிக்ஸர்கள் விளாசியதை பார்த்தோம். அவருக்கு 43 வயதாகிறது. 2005 ஆம் ஆண்டில் அவர் விளையாடியதைப் போன்று தற்போதும் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
”அவரிடம் இன்னும் சிக்ஸர் விளாசும் ஆற்றல் அப்படியே இருப்பதாக நினைக்கிறேன். அவரது இத்தனை ஆண்டுகள் அனுபவத்தின் மூலம், ஆட்டம் குறித்து நிறைய விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கும். ” - கங்குலி
தோனி இந்தாண்டு 2025 ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
சேப்பாகத்தில் நடைபெறும் போட்டியின்போதே அவர் ஓய்வு பெற விரும்பவதாகவும் தோனி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
தோனி கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என்பது எல்லாரும் அறிந்ததே. அப்படியிருக்கையில், சி.எஸ்.கே. இனி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.