மேட்ச் பார்க்க வந்த தோனியின் ஸ்பெஷல் ரசிகர்கள்!
டெல்லி அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எம்.எஸ். தோனியின் போட்டியை காண அவரின் ஸ்பெசல் ரசிகர்கள் வந்திருந்தனர்.
எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஸிவா சிங் தோனி ஆகியோர் மைதானத்தில் அமர்ர்ந்திருந்தனர்.
தோனியின் பெற்றோர்கள் ஒருமுறை கூட அவர் ஆடிய போட்டியை மைதானத்திற்கு நேரில் வந்து பார்த்தது இல்லை. டெல்லி அணியுடன் இன்று நடக்கும் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
சென்னை - டெல்லி தொடங்குவதற்கு முன்பு சாக்ஷ் சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் இருப்பதை உறுதி செய்வது போல ஸ்டோரி ஒன்றை வைத்திருந்தார்.
இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை தோனி வென்று கொடு்த்த போட்டிகளின்போது கூட தோனியின் பெற்றோர்கள் இதுவரை நேரில் சென்று போட்டியை கண்டதில்லை.
எம்.எஸ். தோனியின் ஆட்டத்தை நேரில் கண்டு ரசிக்கும் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவா..
43 வயதான தோனி 268 போட்டிகளில் 24 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 841 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 84 ரன்களை எடுத்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்கள் உள்பட 1282 ரன்கள் எடுத்துள்ளார்.
தோனியின் தந்தை பான்சிங் தோனி மற்றும் தாய் தேவகி தேவி தோனியின் போட்டியை நேரில் கண்டு ரசித்த போது. உடன் அவர்களின் பேத்தி ஸிவா தோனி..
தோனி 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 73 அரைசதங்கள், 10 சதங்கள் உள்பட 10 ஆயிரத்து 773 ரன்களை எடுத்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 33 அரைசதங்கள், 6 சதங்கள் உள்பட 4 ஆயிரத்து 876 ரன்களை எடுத்துள்ளார்.