ஐபிஎல்:அதிரடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி யார்?

Published by: ஜான்சி ராணி

இளம் வயதில் ஐபிஎல்லில் பங்கேற்ற முதல் வீரர் மற்றும் இளம் வயதில் 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் சூர்யவன்ஷி.

2011, மார்ச் 27-ம் தேதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுகிறார். ரஞ்சிக்கோப்பை தொடரில் 12 வயதில் அறிமுகம் ஆனார். சூர்யவன்ஷி, பீகாருக்காக விளையாடினார்.

சர்வதேசடி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் 14 வயது 32 நாட்களில், 35 பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.

இவரின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காகத் தனக்கு இருந்த நிலத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விற்றுவிட்டாராம்.

எட்டு வயதிலேயே மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு சூர்யவன்ஷி தேர்வானார். 12 வயதிலேயே ரஞ்சிக் கோப்பையில் ஆடினார்.

தாஜ்பூரில் உள்ள டாக்டர் முக்தேஷ்வர் சின்ஹா மாடஸ்டி பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவன் வைபவ் சூர்யவன்ஷி.

2024-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற யு19 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் சதம் அடித்தார்,, சூர்யவன்ஷி

இளம்வயதில் அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தனது திறமையால் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் அதிரடி காட்டும் சூர்யவன்ஷி சிறப்பான ஆட்டம் தொடர வாழ்த்துகள்.