விற்பனைக்கு வந்த ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணி!

Published by: விஜய் ராஜேந்திரன்

குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகதான் ஐபிஎல் தொடரில் அறிமுகமானது

அந்த அணிக்கான உரிமையை 5 ஆயிரத்து 625 கோடி ரூபாய்க்கு CVC நிறுவனம் வாங்கியது

தற்போது அந்த அணியின் மதிப்பு 12 ஆயிரம் ரூபாய் கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர் சிவிசி கேபிடல் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அணியின் விலை சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் தொடங்கி 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது

இது குறித்து அதானி குழுமம் மற்றும் டோரண்ட் குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

CVC நிறுவனம் குறைந்த அளவிலான பங்குகளை மட்டுமே தக்கவைக்க திட்டமிடுகின்றனர் என தெரிகிறது

பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்ய தீவிரம் காட்டுவதாகவும் தெரிகிறது

2023 ஆம் ஆண்டு அதானி WPL இன் அகமதாபாத் உரிமையை ஆயிரத்து 289 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது