பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக பேட்டிங்கில் தோனி 9-வது வீரராக களமிறங்கினார் சான்டனர், தாக்கூர் ஆகியோர் அவுட்டான பிறகு 9-வதாக தோனி இறங்கினார் ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி தோனி வெளியேறினார் இந்நிகழ்வு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது தோனி 9-வது வீரராக இறங்கியது பல்வேறு வகையில் விமர்சிக்கப்பட்டது 2023 ஐபிஎல் தொடரில் இருந்தே தோனிக்கு காலில் பிரச்சினை இருந்து வருகிறது நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தோனிக்கு முழங்காலில் தசைநார் கிழிசல் ஏற்படுள்ளது ஓடி அதிக ரன்கள் எடுக்க முடியாது என்பதால் ஃபோர்ஸ், சிக்ஸர்ஸ் மட்டுமே அடிப்பது போன்று திட்டமிடப்பட்டது தசைநார் கிழிசல் பெரிதாக மாற, ஓய்வெடுக்கும் படி தோனியை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் தோனி தொடர்ந்து விளையாடுவதற்கான காரணம், சி.எஸ்.கே. அணியில் மாற்று விக்கெட் கீப்பர் இல்லாததுதான்