ஐபிஎல் அணியை வாங்குகிறார்கள் தீபிகா - ரன்வீர் இதுவரை 8 அணிகள் விளையாடிய சூழலில் புதிதாக இரண்டு அணிகள் ஐபிஎல்லில் களமிறங்குகின்றன மான்செஸ்டர் யுனைடெட் அணி தீபிகா - ரன்வீரோடு இணைந்து ஏலத்தில் இறங்குகிறது. இந்த ஏலம் 25ஆம் தேதி துபாயில் நடக்கிறது. தீபிகா படுகோனே முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள். தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் தீபிகா விளையாடியிருக்கிறார். ரன்வீர் சிங் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர். ஷாருக், ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பின் பாலிவுட்டிலிருந்து ஐபிஎல்லுக்குள் நுழைகிறார்கள் தீபிகாவும், ரன்வீரும். இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்படுவதால் பிசிசிஐக்கு ரூ. 7000 கோடிவரை லாபம் கிடைக்கும்.