யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.



பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார். ச



சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 11, 2014ஆம் ஆண்டு அன்று அறிவித்தது. 2015 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.



'மனிதகுலத்திற்கான யோகா' என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாகும்.



யோகா ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மை பயக்கும்.



மக்கள் மிகவும் நெகிழ்வாகவும் வலுவாகவும் வைக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்பிக்கையை அதிகரிக்கவும் யோகாசனங்கள் உதவுகின்றன.



யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்தால், பல உடல்நலப் பிரச்னைகளை சமாளிக்க உதவும்.



இது மனதில் உள்ள தீங்கு விளைவிக்கும் எண்ணங்களையும் உடலில் உள்ள நச்சுகளையும் குறைக்க உதவுகிறது.



அதே நேரத்தில் நெகிழ்வுத்தன்மை, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.



சர்வதேச யோகா தின வாழ்த்துகள்! தினமும் யோகா செய்ய உறுதி ஏற்போம்.