கோடை வந்ததும் மாம்பழம் சாப்பிடலாம் என்று மனம் குஷியாகிவிடும்.



அதேபோல மாங்காய் பிரியர்களுக்கும் மாங்காய் என்றால் மகிழ்ச்சியாகதான் இருக்கும்.



ஊறுகாயில் அதிக உப்பு, வினிகர் சேர்பதால் பல நாட்களுக்கு கெடாமல் இருக்கும். ஆனால், இதனால் உடல் நலனுக்கு கேடுதான் மிஞ்சும்.



அதனால் வீட்டியேலே மாங்காய் ஊறுகாய் தயாரித்து பயன்படுத்தலாம்.



புளிக்கும் மாங்காயில் கார மிளகாய் பொடி போட்டு எண்ணெய் ஊற்றி தாளித்தால் சிறப்பாக இருக்கும்.



காய் பதத்தில் இருக்கும் மாங்காய்யை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.



பச்சை மிளகாயை குறுக்கில் ஒரு கீரலாக நறுக்கிக்கொள்ளவும்.



ஒரு வானலியில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, பெருங்காயம் சேர்க்கவும், பிறகு நறுக்கிய மாங்காய், மிளகாய்த்தூள் சேர்த்து, கிளறவும், அடுத்து தேவையான அளவு உப்பு, வெந்தயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்,



மாங்காய் ஊறுகாய் ரெடி!



இது ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை இருக்கும். சுவையாக சாப்பிடலாம்.