இந்திய ஆண்கள் ஹாக்கி டிஃபென்டர் நிலம் சஞ்சீப் நடந்துவரும், ஹாக்கி உலகக் கோப்பை 2023-ல் முதல் முறையாக உலகக்கோப்பையில் ஆடிவருகிறார். இந்த வளர்ந்து வரும் நட்சத்திரத்தை நாடே கொண்டாடி வருகிறது. ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கடோபஹல் கிராமத்தில் எரிவாயு மற்றும் தண்ணீர் இணைப்பு இல்லாத 'குடிசை' வீட்டில் வசித்து வருகிறார். சஞ்சீப் உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். எங்கள் மகன் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார் என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என அவரது பெற்றோர் கூறுகின்றனர். தனது சிறுவயதில் மூங்கில் குச்சிகள் மற்றும் கிழிந்த துணிகளில் செய்யப்பட்ட பந்துகளைப் பயன்படுத்தி ஹாக்கி பயிற்சி செய்துள்ளார். மின்சாரம் இல்லாத ஒரு கிராமத்தில் வளர்ந்து, தனது பெற்றோருக்கு விவசாயத்தில் உதவி செய்வதில் ஈடுபட்டிருந்தவருக்கு ஹாக்கி மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைப் பதக்கத்துக்கு நாட்டை வழிநடத்தினார். 17 வயதான நிலம் சஞ்சீப், 2016 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். சஞ்சீப் போன்ற போராட்ட குணம் நிறைந்த வீரர்களும் இளைஞர்களும் தான் இந்த தேசத்தின் நம்பிக்கையாக இருக்கின்றனர்.