இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக இருப்பவர் சவிதா புனையா..! அணியின் கேப்டனாக இருப்பதுடன் கோல் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார்..! அணியின் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்...! ஹரியானா மாநிலத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே ஹாக்கி மீது ஆர்வமாக இருந்தார்..! இவரது சிறப்பான ஆட்டத்துக்கும் அற்பணிப்புக்கும் 2018ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது..! 2017ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் சிறப்பான கோல் கீப்பர் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது...! இந்த ஹரியானா சிங்கத்துக்கு தற்போது வயது 32..! 2018ஆம் ஆண்டில் இந்திய மகளிர் அணியை வெள்ளிப்பதக்கம் வெல்ல வைத்தார்..! இவர் தனது 17வது வயதில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்..! இவர் இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துவோம்..!