'பா' என்பது இந்தியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய காலணி அளவு அமைப்பு

‘பா’ எனும் வார்த்தை பாரத் என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது

இந்தியர்களின் பாதங்கள் பொதுவாக ஐரோப்பியர், அமெரிக்கர்களை விட அகலமாக இருக்கும்

வெளிநாட்டு சைஸில் ஆன்லைனில் காலணி வாங்கும் பல நபர்களுக்கு அவை பொருந்தாமல் இருந்து வருகிறது

பின், 79 இடங்களில் 1,00,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பாதம், 3டி ஃபுட் ஸ்கேனிங் செய்யப்பட்டது

அதன் படி வயதுக்கு ஏற்றவாறு 8 விதமான காலணி அளவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த மாற்றம் காலணி உற்பத்தியை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த காலணி அளவு அமைப்பு 85% இந்தியர்களுக்கு பொருத்தமாக இருக்கும்

கைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது