நரேந்திர மோடி, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.



அணுகுமுறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.



சீனியர், ஜூனியர் பார்க்காமல், அமைச்சர்களுக்கு 5 உத்தரவுகளைப் போட்டுள்ளார்.



இந்த உத்தரவுகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என, 3.O முதல் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்



தமது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் போட்ட, 5 உத்தரவுகளை பார்ப்போம்



1.அமைச்சர்கள்  யாரும் பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கக்கூடாது



2. மற்றவர்களின் அமைச்சுப் பணிகளில் தலையிடக்கூடாது



3. அமைச்சரவை சகாக்கள், அவர்களிடம் கேட்கப்படாத  நிலையில், தேவையற்ற ஆலோசனைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்



4. அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்தில் தத்தமது அலுவலங்களுக்கு வர வேண்டும்.



5. மூத்த அமைச்சர்கள், அமைச்சகம் தொடர்பான கோப்புகளை, இணை அமைச்சர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.