டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது



சுப்மன் கில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்களை விளாசினார்



ஹர்திக் பாண்ட்யா கடைசி நேரத்தில் 17 பந்துகளில் 30 ரன்களை அடித்தார்



20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது



இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி



தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் (3), டெவோன் கான்வே (1) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்



சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட் எடுத்தார்



அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்



66 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது



168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது