இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது



இந்த தொடரில் தினேஷ் கார்த்திக்,ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது



போட்டி நடக்கும் அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை 6 டி20 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளது



இதில் இந்தியா 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி தலா ஒரு வெற்றி, தோல்வியை பெற்றுள்ளது



வறண்ட மைதானம் என்பதால் இது பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது



இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட ரன்களின் சராசரியே 156 மட்டும் தான். இதேபோல் 159 ரன்கள் தான் அதிகப்பட்சமாக சேஸ் செய்யப்பட்ட ரன்னாகும்



இந்த மைதானத்தில் விக்கெட் எடுத்தவர்களின் டாப் 10 பட்டியலில் 6 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துவிடும்.

இந்திய நேரப்படி இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது



இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துவிடும்



இந்த டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கே அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது