ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது இந்நிலையில், இரண்டாவது போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்களை குவித்தார் சவுதி வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் கேப்டன் பாண்டியா, நீஷமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஃபின் ஆலன் டக் அவுட்டாகினார் டெவான் கான்வே, கேப்டன் வில்லியம்சன் கூட்டணி 50 ரன்கள் சேர்த்தது அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் வில்லியம்சனும் ஆட்டமிழந்ததை அடுத்து, 67 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது