குழந்தைகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா..! நானும் ரவுடிதான் படப்பிடிப்பில், நயனிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் இடையே காதல் மலர்ந்தது அந்த உறவு காதலுடன் முடியாமல் கல்யாணம் வரை சென்றது இவர்களின் திருமணம் திரை நட்சத்திரங்கள் சூழ கோலகலமாக நடந்தது இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர் இரு குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில், உலக் தெய்வேக் என வித்தியாசமான பெயரை சூட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர் தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி போட்டோ எடுத்து இருவரும் பகிர்வது வழக்கம் இதனையடுத்து தங்கள் மகன்களுடன் இந்த வருடம் கிறிஸ்துமஸை இணைந்து கொண்டாடியுள்ளனர் இந்த புகைப்படங்களை நயன், விக்கி இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் இவர்களது இந்த கிறிஸ்துமஸ் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது