தெலுங்கு முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் லிகர் உருவாகிறது இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனும் நடித்துள்ளார் இதில் குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார் 2022ஆம் ஆண்டு இப்படம் வெளியாக இருக்கிறது லாஸ் விகாஸில் மைக் டைசனை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது சார்மி, அனன்யா பாண்டே உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் இந்தப் படம் மூலம் விஜய் தேவரகொண்டா பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகிறது மும்பையிலும் ஒரு ஷெட்யூல் படமாக்கப்பட்டது