காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று நாம் அடிக்கடி கூறுகிறோம் உணவியல் நிபுணர் ருஜுதா திவேகர், 'காலை உணவைத் தவிர்ப்பது ஒரு போதும் நல்ல யோசனையல்ல' என்று கூறுகிறார் காலை உணவை தவிர்த்தால் கவனம் மற்றும் கற்றல் குறைபாடு வரலாம் என்று எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுனர்கள் இது பள்ளியில் குழந்தைகளின் செயல்திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது காலை உணவை உண்ணும் குழந்தைகள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன நமது தசைகளைப் போலவே நமது மூளைக்கும் எரிபொருளுக்கான உணவு தேவைப்படுகிறது காலை உணவைத் தவிர்ப்பவர்களால், காலை உணவைத் தவறாமல் சாப்பிடுபவர்களைப் போல் திறம்பட உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாதாம் காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு, இரவில் ஆரோக்கியமற்ற உணவின் மீது ஆசை வரும் காலை உணவைத் தவிர்க்கும் போது இரத்தச் சர்க்கரை அளவு குறைவதால் எரிச்சல் மற்றும் அமைதியின்மை போன்ற உணர்வுகள் ஏற்படும் ‘காலை சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேறுபவர்கள், வெளியில் ஒவ்வொரு போரிலும் தோற்கிறார்கள்’ என்கிறார் உணவியல் நிபுணர் ருஜுதா திவேகர்