ஒரு கடாயில் நெய், துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் நன்கு கிளறி விட்டால் பூரணம் தயார் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர், நெய் அல்லது எண்ணெயை கொதிக்க வைத்து அதனுடன் தேவையான பச்சரிசி மாவை கலக்கவும் பின்னர் மாவை சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து சிறு உருண்டையாக எடுத்து கொள்ளவும் பிசைந்த மாவின் மேலே கொஞ்சமாக நெய்யை தடவி 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் முதலில் தயார் செய்த பூரணத்தையும் சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும் மாவின் உள்ளே இந்த பூரணத்தை வைத்து உங்களுக்கு தேவைப்படும் வடிவத்தில் பிடிக்கவும் இதனை இட்லி தட்டில் வைத்து மூடி விட்டு 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் போதும் விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டைகள் தயார் தேவைப்பட்டால் எள்ளும், ஏலக்காயும் சேர்க்கலாம் விநாயகருக்கு பிரதான நெய்வேத்தியம் பூரண கொழுக்கட்டை தான்..!