சாக்லேட் குக்கீஸ் யாருக்குதான் பிடிக்காது. எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.



1/2 கப் வெண்ணெய்,1/2 கப் காஸ்டர் சுகர், 3/4 கப் பிரவுன் சுகர், 1/4 கப் ஐசிங் சுகர், 1 முட்டை + 2 முட்டை மஞ்சள் கரு,



1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், மாவு 1 + 1/2 கப், 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் உப்பு, 200 கிராம் சாக்லேட் சிப்ஸ்



ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெய், காஸ்டர் சுகர் ,மற்றும் ஐசிங் சுகர், முட்டை ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.



மாவு மற்றும் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் சோடா உப்பு ,ஆகியவற்றை நன்கு கலக்க வேண்டும் அதனை குக்கி மாவைப்போல் வரும் வரை, நன்கு கலக்க வேண்டும் .



இறுதியாக சாக்லேட்டை அதில் சேர்க்க வேண்டும்



இறுதியாக மாவை குளிர்வித்து பிஸ்கட்கா வடிவமைக்கவும்.



இவற்றை பட்டர் பேப்பரில் வைத்து, குக்கீகளை 180 டிகிரி செல்சியஸில் 15-20 நிமிடங்கள் பேக் செய்யவும்.



அவ்வ்ளவுதான் குக்கீஸ் ரெடி.



சுட..சுட..சுவைத்து சாப்பிடலாம்.