குளிர் காலம் தொடங்கி விட்ட நிலையில் பலருக்கு சூடாக குடிக்கலாம் என தோன்றும்



அப்படி நீங்கள் குடிக்கும் நீர் ஆகாரம் உடலுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்



அப்படியான ஒன்று தான் தக்காளி சூப் . இதனைச் செய்வது மிகவும் எளிது



தேவையான பொருட்கள்:

6-7 - தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய் (1), நெய்
(1 டீஸ்பூன்), சர்க்கரை தூள் (1/2 டீஸ்பூன்), சீரகம்,கருப்பு மிளகு, பெருங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.



தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி பச்சை மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும்.



ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் சீரகம், காரப்பொடி சேர்க்கவும். அதில் தக்காளி விழுதை ஊற்றவும்



இதனுடன் மிளகு, சர்க்கரை தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளற வேண்டும்.



நன்கு கொதித்ததும் அதில் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறலாம்



இதில் தேவைப்படும் பட்சத்தில் பனீர், நிலக்கடலை உள்ளிட்டவை சேர்க்கலாம்



இதனை நாம் 10 நிமிடங்களில் செய்து விடலாம்