முதுமையை வேகப்படுத்தும் உணவுகள்..! முதுமையை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாம் நம்மில் எல்லோருமே நம் வயதை விட சற்று இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றே விரும்புவோம் நம் உடலில் முதுமை தோற்றம் ஏற்படும்போது அதை முதலில் நமது தோல் மற்றும் முடிதான் காட்டிக் கொடுக்கின்றது இந்த உணவுகளை தவிர்த்தலும் இளமையாக இருக்க உதவும் என சொல்லப்படுகின்றது அதிகப்படியான சர்க்கரை உண்பது, குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வயதான செயல்முறையை துரிதப்படுத்தும் என சொல்லப்படுகின்றது ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள், வயதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றது அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது உங்களுக்கு விரைவாக வயதான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடும் இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வதால் கொலாஜனை பலவீனப்படுத்தலாம், இது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும் டீ, காபியில் கஃபைன் உள்ளது. ஆனால் அது அதிகமாக இருந்தால் அது உங்கள் சருமத்தை மோசமாகப் பாதித்து உங்களை முதுமையாக்கும்