இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் மிக மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது “தயிர்”



மீதம் அடைந்த தயிரை வைத்து மிக எளிமையாக பன்னீர் தயாரிக்கலாம் என பலருக்கு தெரிவதில்லை



நல்ல ஆழம் கொண்ட பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் 3 கப் பால் சேர்க்கவும்



அதை மிதமான தீயில் சூடுபடுத்தி மீதமான 1 ½ கப் தயிர் எடுத்து நன்றாக கலக்கி விடவும்



தீயை மிக மெதுவாக குறைத்து பாலுடன் தயிர் சேர்த்து கிளறி விடவும்



கடாய் ஒன்றை எடுத்து அதன் மீது வெள்ளை நிற துணி ஒன்றை கட்டி காய்ச்சி வைத்த பால் தயிர் கலவையை இதன் மீது ஊற்றவும்



சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரையில் இந்தக் கலவையை ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்



இப்போது துணியை நீக்கி விட்டு பார்த்தால் பன்னீர் தயார் நிலையில் இருக்கும்



இதை உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டு தேவையான சமயங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்



தயிரை நன்றாக கலக்கவில்லை என்றால் பன்னீர் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்