சுவை மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களையும் கொண்ட வெங்காயம் வடகம் செய்வது பற்றி பார்ப்போம் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி 4 மணி நேரம் வரை உலர விடவும். உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் ஊறிய உளுந்தம் பருப்பை உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும் அரைத்த மாவில் மேலே சொன்ன பொருட்களோடு நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து பிசையவும் பின் ஒரு துணியை விரித்து சிறிது சிறிதாக மாவை ஊற்றி வெயிலில் காய வைக்கவும் இரண்டு நாட்களில் வடகம் தயாராகி விடும் இதனை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும் வெயில் காலத்திற்கு ஏற்ற உணவுகளை எடுக்கும்போது எண்ணெயில் பொறித்த வடகம் வைத்து சாப்பிடலாம்.