பொங்கல் பண்டிகைக்கு வீட்டில் என்ன ஸ்நாக்ஸ் செய்யணும்ன்னு தெரியலையா? எந்த நேரத்திலும் சாப்பிட கூட தட்டை செய்வது எப்படி என பார்க்கலாம் 200 கிராம் புழுங்கல் அரிசியை ஊற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும். அடுத்ததாக மிளகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இதனை அரிசி மாவுடன் கலக்கவும் ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பை 10 நிமிடம் ஊற வைத்து இந்த மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும் இதனைத் தொடர்ந்து வனஸ்பதியை நன்கு காய்ச்சி இந்த மாவுடன் சேர்க்கவும் மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை மெல்லிய தட்டையாக மாற்றி பொறித்து எடுக்கவும் அவ்வளவு தான் சுவையான பருப்பு தட்டை ரெடி..! இதை டீ, காபி போன்ற பானங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.