தேங்காய் இல்லாமலே தேங்காய் சட்னி செய்யலாம்..ரெசிபி இங்கே!



தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காய தூள்



பொட்டு கடலை, தண்ணீர், எண்ணெய், கடுகு விதைகள், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெங்காயம்



செய்முறை: முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் பொடியாக வெட்டி எடுத்து கொள்ளவும்



பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்



பிறகு அதில் உப்பு மற்றும் பெருங்காய தூள் சேர்க்கவும்



அந்த கலவையை ஒரு மிக்சியில் தண்ணீர் மற்றும் பொட்டு கடலை சேர்த்து கெட்டியாக மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்



பிறகு ஒரு பாத்திரத்தில், எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்



பிறகு இதனுள் கெட்டியான சட்னி விழுதைச் சேர்த்து நன்கு கலக்கவும்



அவ்வளவுதான் சுவையான தேங்காய் இல்லாத தேங்காய் சட்னி தயார்