உடல் வெப்பம், வியர்வை, ஒவ்வாமை காரணமாக கழுத்தைச் சுற்றிலும் கருப்பாக இருக்கலாம்



இதை மறைய வைக்க சில வீட்டுக்குறிப்புகளை செய்து வாருங்கள்



2 ஸ்பூன் ஆப்பில் சிடார் வினிகருடன் நான்கு ஸ்பூன் தண்ணீர் கலந்துகொள்ளவும்



பஞ்சில் நனைத்து கழுத்தைச் சுற்றிலும் தேய்து வர கருமை நீங்கும்



2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கரைத்து கொள்ளவும்



கழுத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்



உருளைக்கிழங்கை அரைத்து அதை சாறு பிழிந்து கழுத்தை சுற்றிலும் தேய்த்து வர கருமை நீங்கும்



2 tsp கடலை மாவு, 1/2 tsp மஞ்சள், எலுமிச்சை சாறு 1/2 tsp ,ரோஸ் வாட்டர் என அனைத்தையும் பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்



கழுத்தை சுற்றிலும் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்



தயிருடன் எலுமிச்சை சாறு பிழிந்து அதை கழுத்தை சுற்றிலும் தடவுங்கள் நல்ல பலன் தெரியும்