நீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூளை குழைத்து சேற்றுப்புண் மீது தடவி கொள்ள வேண்டும்



இரவு முழுவதும் காய்ந்தால் மறுநாளே இந்த புண் ஓரளவு மட்டுப்படும்



வேப்பிலையை அரைத்து அதனுடன் மஞ்சளை சேர்த்து குழைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும்



இவை உடலை சுத்தம் செய்வது போன்று கால்களில் இருக்கும் பூஞ்சை தொற்றையும் சுத்தம் செய்யும்



அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அதில் ஒரு பிடியளவு உப்பு சேர்க்கவும்



கால்களை நனைத்து ஊறவைத்து பத்து நிமிடங்கள் வரை வைத்திருந்து சுத்தமான துணியால் துடைத்து எடுக்கவும்



மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் முழுக்க தடவ வேண்டும்



காலையில் எழுந்ததும் கால்களை கழுவி விடவும் இரண்டே நாளில் மாற்றம் தெரியும்



கால் விரல்கள் இடுக்குகளில் தேங்காய் எண்ணெயை கலந்து பிறகு குளிக்கலாம்



தேங்காய் எண்ணெயோடு மஞ்சளை குழைத்தும் பூசி பிறகு குளிக்கலாம்