செம்பருத்தி செடியில் ஆரோக்கிய ரீதியாக எண்ணற்ற பலன்கள் உள்ளது



தலைமுடி வளர்ச்சிக்கும், குளியல் பவுடர் தயாரிப்புக்கும் அதிகம் பயன்படும்



செம்பருத்தி அனைவரது வீட்டிலும் வளர்ப்பது அதிர்ஷ்டத்தையும் தரும் என்பது நம்பிக்கை



செம்பருத்தி செடிக்கு சூரிய ஒளி தேவை



வெயில் குறைவாக இருக்கும் இடங்களில் செம்பருத்தி செடி செழிப்பாக வளராது



செடியில் தனியாக இருக்கும் இலைகளை வெட்டிவிட்டால் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்



வெந்தயத்தை அரைத்து சிறிதளவு பவுடர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்



செம்பருத்தி செடி இருக்கும் இடத்தில், மண்ணை கிளறி விட்டு ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்த பொடியை தூவிவிடலாம்



வெந்தயத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சத்து பூக்காத பூச்செடிகளையும் வேகமாக பூக்க வைக்கிறது



மண்ணின் அடிப்பகுதி வரை ஈரப்பதம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்