கூந்தல் சேதமடைவதாலும், முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகளாலும் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்



இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கூந்தலை பராமரிக்கலாம்



செம்பருத்தி மாஸ்க் தலைமுடிக்கு முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும்



செம்பருத்தி பூ மற்றும் இலை இரண்டையும் உங்கள் தலை முடியில் அப்ளை செய்யலாம்



பிரெஷாக பறித்த சில செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்



இதழ் மற்றும் இலைகளை மிக்சி ஜாரில் சேர்த்து தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்



இந்த பேஸ்டை தலைமுடி வேரில் இருந்து நுனி வரை தடவிக் கொள்ளுங்கள்



தலைமுடியை கட்டி சுமார் 30- 40 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும்



ரசாயணம் குறைவான ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்



மாதத்திற்கு இரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதன் மூலம் உங்கள் கூந்தலில் மாற்றங்களை காணலாம்