வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகை டீயை செய்ய 3 பொருட்கள் போதும்! ஓமம் சீரகம் மற்றும் சோம்பை கொண்டு மூலிகை டீ தயாரித்து குடிக்கலாம் முதலில் ஓமம் மற்றும் சீரகத்தை 7-9 மணி நேரத்திற்கு ஊறவைத்துக் கொள்ளவும் பின்னர் இதனுடன் சோம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் தண்ணீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி வெதுவெதுப்பாக குடிக்கலாம் ஓமத்தில் உள்ள தைமால், குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது ஓமத்தில் உள்ள நார்ச்சத்து, வாயு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை நீக்குகிறது சீரகம் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கின்றன ஓமத்தை போலவே சீரகத்திலும் தைமால் எனும் சேர்மம் உள்ளது சோம்பு கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது