சூரணம், பொடி, பேஸ்ட், தேநீர் எனப் பலவகைகளில் இது மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. செம்பருத்தி செம்பருத்தி இலை சாற்றின் விளைவை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின்படி அது நம் உடலின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. செம்பருத்தியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் குணநலன் அதிகம் உள்ளது. ஃபிளாவனாய்டுகள், பினோலிக் கலவைகள், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்றவை உடலின் ஆக்ஸிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. அதிக கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் அல்லாமல் வீக்கத்தை எதிர்த்தும் செம்பருத்தி போராடுகிறது. கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு செம்பருத்திச் சாறு பிரதானமான மருந்தாகக் கருதப்படுகிறது. எதுவாயினும் இதனை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் இதயநல மருத்துவரை அணுகப் பரிந்துரைக்கப்படுகிறது.